நாடு முழுவதிலுமிருந்து திறமையான விளையாட்டு வீரர்களைக் அடையாளம் காண இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் (எஸ்.எல்.சி) மாகாண ரீதியில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கங்கள், மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வயது விளையாட்டு வீரர்களையும் அடையாளம் காணப்பது நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களின் முக்கிய பொறுப்பாகும்.

அதன்படி, அவர்கள் மாவட்ட மற்றும் மாகாண கிரிக்கெட் சங்கங்கள், பாடசாலை பயிற்சியாளர்கள், கிரிக்கெட் விரிவுரையாளர்கள் மற்றும் அதிபர்களுடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் மறைக்கப்பட்ட திறமைகளை அடையாளம் கண்டு இளைஞர் மட்ட திட்டங்கள் மூலம் தேசிய மட்டத்திற்கு கொண்டு வருவார்கள்.

ஒருங்கிணைப்பாளர்களின் நியமன சான்றிதழ்கள் வழங்கலில் உள்ளூர் கிரிக்கெட் பிரிவின் தலைவர் சிந்தக எதிரிமன்னே, பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலக் வட்டுஹேவா மற்றும் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கமல் இந்திரஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.