உலகளவில், இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி 2,506,752 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதோடு, இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 113,081,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 88,698,691 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,506,752 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 21,876,197 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு, சிகிச்சை பெறுபவர்களில் 91,856 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையும் குறிப்பிடதக்கது.