இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 70 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு மாகாண அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் பரிகி மவுண்டோங் மாவட்டத்தில் உள்ள புரங்கா கிராமத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.