தொழிற்சங்கத்துக்கு சொந்தமான நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக பதிவுசெய்யப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றம் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுத்தது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.