பெப்ரவரி 20 ஆம் திகதி மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 41 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சிசிலியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலய குழுவினர், பெப்ரவரி 18 அன்று 120 பேருடன் லிபியாவை விட்டு வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் படகு விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியதுடன், மீட்கப்பட்டவர்களிடமிருந்து சாட்சியங்களை பதிவுசெய்து வருவதாகவும் கூறியுள்ளது.
விபத்தின்போது படகில் கர்ப்பிணிப் பெண் உள்ளடங்கலாக ஆறு பெண்களும், நான்கு சிறுவர்களும் இருந்ததாக சர்வதேசக் குடியேற்ற அமைப்பும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம் ஆகியவை கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
தப்பிப் பிழைத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் லிபியாவிலிருந்து புறப்பட்ட சுமார் 15 மணி நேரத்திற்குப் பிறகு படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச அமைப்புகள் சேகரித்த தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மத்திய மத்தியதரைக் கடலில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் சுமார் 160 பேர் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பெப்ரவரி 21 வரை கடல் வழியாக இத்தாலியை அடைந்த 3,800 க்கும் மேற்பட்டவர்களில், 2,500 க்கும் மேற்பட்டோர் லிபியாவிலிருந்து சென்றோர் ஆவர்.
சர்வதேசக் குடியேற்ற அமைப்பின் தரவுகளின்படி 3,580 க்கும் மேற்பட்டவர்கள் கடலில் தடுக்கப்பட்டதுடன், அவர்கள் மீண்டும் லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM