இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பின்போது, இம்ரான் கான் தனது கையெழுத்துடனான கிரிக்கெட் மட்டையை நாமல் ராஜபக்ஷவுக்கு பரிசளித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் தனது சார்பில் நினைவுப் பரிசொன்னை பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கியதுடன், தனது நன்றிகளையும் தெரிவித்தார்.