(செ.தேன்மொழி)

அமரர் இரா. சிவலிங்கத்தின் 21 ஆவது ஞாபகார்த்தப் பேருரை நிகழ்வுடன் , மூத்த தமிழ் அரசாங்க உயர் அதிகாரியும் , எழுத்தாளருமான எம். வாமதேவனின் 'குன்றிலிருந்து கோட்டைக்கு' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும் வெள்ளவத்தையில் அமைந்துள்ள தமிழ் சங்கத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது , நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன்,  அமரர் இரா.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் தலைவரான  எம்.வாமதேவன் , உறுப்பினர்களான , முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், ராஜ் சிவராமன்,எச்.எச். விக்கிரமசிங்க , கலாநிதி இராமானுஜம், பேராசிரியர்களான எம்.எஸ். மூக்கய்யா , தை. தனராஜ், சோ .சந்திரசேகரன், ஈ.எஸ்.சந்திரபோஸ் , மத்தியவங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் எம். கேசவராஜ் , முன்னாள் உதவித்தூதுவர் கிருஷ்ணமூர்த்தி , வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  எம்.செந்தில்நாதன் ஆகியோர் அதில் பங்குபற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அமரர் இரா.சிவலிங்கத்தின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வுக்கு வருகைத்தந்தவர்களை குழுவின் உறுப்பினரான இராதாகிருஷ்ணன் வரவேற்றிருந்தார். பின்னர் ஞாபகார்த்த குழுவின் தலைவர் வாமதேவன் தலைமைவுரையை நிகழ்த்தியதுடன் , இதன்போது அமரர் இரா.சிவலிங்கத்தின் பண்முக ஆளுமை மற்றும் அவருடன் இணைந்து செயலாற்றிய எஸ்.திருச்செந்தூரன் அவர்களின் ஆளுமைத் தொடர்பிலும் , சிவலிங்கத்தின் ஞாபகாரத்த குழுவினரின் இன்றுவரையான செயற்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டையும் தனது உரையில் உள்ளடக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையை நிகழ்த்தும் நபர் தொடர்பான அறிமுகத்தை பேராசிரியர் தை.தனராஜ் முன்வைத்திருந்தார். இம்முறை அமரர் இரா.சிவலிங்கத்தின் நினைவுப் பேருரை கொவிட்-19 : மலையக சமூகத்தின் மீதான சமூகபொருளாதார விளைவுகள் எனும் தலைப்பில் அமையப் பெற்றிருந்ததுடன் , அந்த பேருரையை சிரேஸ்ட பொருளியலாளர் , பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் இலங்கை மத்தியவங்கி உறுப்பினர் எம். கேசவராஜா நிகழ்த்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையாளர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வின் இரண்டாவது அம்சமாக எழுத்தாளர் எம். வாமதேவனின் 'குன்றிலிருந்து கோட்டைக்கு'என்ற  நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இதன்போது மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் , முன்னாள் பிரதி அமைச்சர் பி.பி.தேவராஜ், தமயந்த்தி ஏற்றுமதி நிறுவன உறுப்பினர் எம். சுப்பிரமணியம் , கலாநிதி.இராமானுஜம், வி.சிவஜானசோதி, விஜயகௌரி பழனியப்பன்,மத்தியவங்கி உறுப்பினர் கே. ஜெகநாதன், மங்கள் வங்கியாளர் எஸ்.பொன்னுதுறை , டாக்டர்.ஞானசேகரன், வை.எல்.எப்.ஸவாஹீர்,வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  எம்.செந்தில்நாதன், பேராசிரியர்களான மூக்கய்யா, சோ.சந்திரசேகரன் , ஈ.எஸ்.சந்திரபோஸ், தை.தனராஜ்,  எச்.எச்.விக்கிரமசிங்க , முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், சுப்பையா, முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் குருசாமி ஆகியோருக்கு நூலின் சிறப்பு பிரதிகளை வழங்கிவைத்தார்.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் வி.சிவஜானசோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், சரூக ஆய்வாளர் மாதவகலா ஸ்ரீதரன் , தேசிய கல்வி நிறுவனத்தின் உதவி விரிவுரையாளர் தாஹிர் நூருல் இஸ்ரா ஆகியோர் குன்றிலிருந்து கோட்டைக்கு என்று நூல் தொடர்பான கருத்துரையை வழங்கியிருந்தனர்.  குன்றிலிருந்து கோட்டைக்கு என்ற நூலானது எதிர்கால சந்ததியினர் தங்களது வாழ்வில் வெற்றிக் கொள்வதற்கான படிப்பினையாகவும் , முன்மாதிரியாகவும் விளங்கும் என்றும் , இந்த நூலை வாசிப்பதன் ஊடாக எந்தவொரு சவாலையையும் வெற்றிக் கொள்வதற்கான ஆளுமை வாசிப்பவர்கள் மனதில் ஏற்படும் என்றும் கருத்துரையாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் எஸ்.தெளிவத்தை ஜோசப்  நூலின் வெளியீட்டுரையை நிகழ்த்தியதுடன் , இதன்போது அவர் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தை , நூலாசிரியர் வாமதேவன் முறையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் , அந்த நூல் வளர்ந்து வருபவர்களுக்கு பெரும் முன்மாதிரியாகவும் , படிப்பினையாகவும் அமையும் என்றும், அனைவரையும் இந்த நூலை வாசித்து பயன்பெருமாறும் குறிப்பிட்டார். பின்னர் நுலாசிரியர் வாமதேவன் ஏற்புரையை வழங்கினார். அமரர் இரா. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழுவின் உறுப்பினர் ராஜ் சிவராமன் நன்றியுரையை தெரிவித்தார். இதன்போது தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ் .கருணாகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.