சப்ரகமுவ மாகாணத்தில் பல இடங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரடிங்ளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

அதன்படி இப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் மூடுபனி நில‍ைமைகளை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.