நாட்டில் கொரோனா தொற்றால் 04 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

அந்த வகையில் பொரலஸ்கமுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மோசமடைந்த சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்கிஸ்ஸ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், 2021 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். 

தீவிர நீரிழிவு மற்றும் கொவிட் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொட்டுகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய ஆண் ஒருவர், வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் இருந்து வடகொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.