க.பொ.த. சாதாரணதர பரீட்சை கடமையில் ஈடுபடுவோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 09:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை கடமையில் ஈடுபடும அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காரியாலய பணிக்குழாத்தினருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சர் உட்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.

அவசியமற்ற அரசியல் தலையீடுகள் பாடசாலையின் வளர்ச்சியை குழப்புகின்றன - இலங்கை  ஆசிரியர் சங்கம் | Virakesari.lk

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடமைகளில் ஈடுபட இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதன் தேவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் 4,513 பரீ்ட்சை மத்திய நிலையங்களில் மார்ச் முதலாம் திகதி கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பாக இருக்கின்றது. இதற்காக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை மண்டப உதவியாளர்கள் என சுமார் 46 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபட இருக்கின்றனர். கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பரீட்சை கடமையில் ஈடுபடும் இவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சர் உட்பட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாட்டில் நாளாந்தம் கொவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், சுமார் 6 இலட்சம் மாணவர்கள் தோற்றும் இந்த பரீட்சையில் அவர்களில் பாதுகாப்பு தொடர்பாக கல்வி அதிகாரிகள்  கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கொவிட் தொற்று நிலைமையில்  தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் தேவை தொடர்பில் தீவிரமாக கவனம் செலுத்திவருகின்றோம். தற்போதைய நிலைமையில் முன்னுரிமை மற்றும் விரைவான வேலைத்திட்டமாக , எதிர்வரும் தினங்களுக்குளாவது பரீட்சை கடமைகளில் ஈடுபட இருக்கும் அதிபர் ,ஆசிரியர்கள் உட்பட பணிக்குழாத்தினருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37