இன்றும், நாளையும் 6 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமை தாங்கி பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், பதிவாளர் வி. காண்டீபன், நிதியாளர் எஸ். சுரேஷ்குமார், நூலகர் சி. கல்பனா மற்றும் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கொவிட் 19 நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.