வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.
இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் போராட்ட பந்தலுக்கு முன்பாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நானகு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. எமக்கான நீதி கிடைக்கவில்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர்.
எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என்றனர்.
இவ் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு பிள்ளைகளின் படங்களையும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளினுடைய கொடிகளையும் தாங்கியவாறு கண்ணீர் மல்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM