(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு விஜயமேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடு திரும்புவதற்கு முன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த சந்திப்பு இன்று புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவர் வீரகேசரி செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார். 

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்த பாக்கிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர். 

எனினும் கொவிட்-19 வைரஸ் தொற்று மற்றும் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

இவ்வாறானதொரு நிலையில் தொடர்ந்தும் பல வழிகளில் முயற்சித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.