ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய செயக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இச் சந்திப்பானது கொழும்பு, ஜெயா மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவதோடு, எதிர்கால அரசியல் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.