இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்திப்பார்.

இந்த சந்திப்பானது இன்று காலை ஜனாதிபதி செலயகத்தில் நடைபெறும்.

இதன்போது இம்ரான் கான் பின்னர் வணிக மற்றும் முதலீட்டு மன்றம் மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சி உள்ளிட்ட பல உயர் மட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் சபாநாயகர் மற்றும் விளையாட்டு அமைச்சர் வழங்கும் மதிய உணவில் கலந்து கொள்வார்.

நேற்று மாலை இலங்கைக்கு வந்த பிரதமர் இம்ரான் கான் தனது இரண்டு நாள் அரச பயணத்தை இன்று மாலை முடித்துவிட்டு பாகிஸ்தான் திரும்புவார்.