இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் ஜெனிவா முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது - பொதுஜன பெரமுன

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 05:57 AM
image

 

(இராஜதுரை ஹஷான்)

யுத்தம் முடிவடைந்த பின்னரே தமிழ் மக்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள். தமிழீழ விடுதலை புலிகள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களை பகடயாகாக கொண்டு யுத்த களத்தில் போராடினார்கள்.

இலங்கையை ஜெனிவாவில் நெருக்கடிக்குள்ளாக்க புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனுபிடிய தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

30வருட கால யுத்தம் அனைத்து இன மக்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.விடுதலை புலிகள் அமைப்பு இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களை பகடைகாயாக கொண்டு யுத்தத்தில் ஈடுப்பட்டது. தமிழ் மக்களை பாதுகாக்க இராணுவத்தினர் சிறந்த முறையில் செயற்பட்டார்கள் என்பதை ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற அனுபவத்தில் குறிப்பிட முடியும்.

யுத்த்தை நிறைவுக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்பட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரே அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ முற்பட்டார்கள்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே மேம்படுத்தப்பட்டது.யுத்தம் முடிவுக்கு கொண்டுவ வந்ததன் பயனை தமிழ் மக்கள் முழுமையாக பெற்றுள்ளார்கள்.

நாட்டுக்கு எதிரானவர்களே இலங்கையினை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணைகளை ஆரம்பத்தில் கொண்டு வந்தார்கள்.இலங்கை இராணுவத்தினரை நெருக்கடிக்குள்ளாக்க புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் முன்னெடுத்த முயற்சிக்கு கடந்த அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கியது.

ஜெனிவாவில் இலங்கையை இம்முறையும் நெருக்கடிக்குள்ளாக்க புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும்,தமிழர் அமைப்புக்களும் பாரிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்கள். இவர்களின் குறுகிய நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் தனித்து இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எடுக்க முடியாது. பாதுகாப்பு சபையில் சீனா,ரஷ்யா ஆகிய பலமிக்க நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59