இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு : வத்தளை, நுவரெலியாவில் மரணங்கள் பதிவு !

By T Yuwaraj

23 Feb, 2021 | 10:32 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Articles Tagged Under: 16 corona | Virakesari.lk

இறுதியாக மூன்று கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

அதன்படி, வத்தளை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

நுவரெலியாவைச் சேர்ந்த 76 வயதான ஆண்ணொருவர், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வலப்பனை பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்ணொருவர், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை இரவு 9.30 மணி வரை 492 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை  81 063 ஆக அதிகரித்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 75 842 பேர் குணமடைந்துள்ளதோடு , 4447 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை நேற்று திங்கட்கிழமை மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. 

தூனகஹ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்னொருவர் குருணாகல் வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் தொற்று, நீரிழிவு நோய் தீவிரமடைந்தமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 19 ஆம் திகதி கொவிட் நிமோனியா காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 ஐ சேர்ந்த 69 வயதுடைய ஆணொருவர் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் தொற்று, இரத்தம் நஞ்சானமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடையை சேர்ந்த 83 வயதுடைய பெண்னொருவர் முல்லேரியா வைத்தியசாலையில் கடந்த 22 ஆம் திகதி கொவிட் நிமோனியா , சிறுநீரக நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 77 வயதுடைய ஆணொருவர் கடந்த 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right