நெடுந்தீவு கடலில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 05:51 AM
image

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களை தேடி இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணியில் நயினாதீவு முனை கடலிலேயே ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறிகாட்டுவானிலிருந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயிருந்தனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயிருந்தனர்.

அவர்களில் நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மற்றையவரைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது என்றும் நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05