யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஐயா கடையடியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் வேனொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெல்லியடி விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த அன்ரனி சியான் (வயது-20) என்ற இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், ஹைஏஸ் வேன் சாரதியைக் கைது செய்துள்ளதாகக் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.