இலங்கையில் தற்போது தேசிய அரசாங்கம் ஆட்சி நடத்துகிறது. அந்த அரசாங்கம் இனவாதத்தை முழுமையாக எதிர்க்கிறது. ஆகவே இலங்கையில் இனவாதம் ஏற்படுவதற்கு இனியொருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. அதற்கான உத்தரவாதத்தை இம்மாநாட்டில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சவூதி அரேபியா மக்காவை  தலைமையகமாகக் கொண்டியங்கும் உலக முஸ்லிம் லீக் (ராபிதா அல் ஆலம் அல் இஸ்லாமி) அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் பிரதான நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.