விமர்சகர்களை சிறைப்படுத்துவதன் மூலம் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாது; மிச்சல் பச்லெட்

Published By: Digital Desk 3

23 Feb, 2021 | 05:18 PM
image

(நமது வி‍சேட நிருபர்)

விமர்சகர்களை சிறைகளுக்கு அனுப்புவதன் ஊடாக தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாது.  மக்கள் மீதான செல்லுபடியற்ற சுதந்திர கட்டுப்பாடுகள் தேவையற்ற  மற்றும் மேலதிக  வகையில் படைகளை பயன்படுத்துதல் போன்றன இந்த வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக அமையாது.  மாறாக தீர்மானம் எடுத்தலில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமாக கொள்கை உருவாக்கத்திலும் இடம்பெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல்  பச்லெட்  தெரிவித்தார்.

ஐக்கிய  நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனிவாவில் அந்நாட்டு நேரப்படி காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகியது.  முதலாவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவர் உரையாற்றிய பின்னர் இரண்டாவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அவர்கள் உரையாற்றினார்.  அதனைத் தொடந்து மூன்றாவதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் உரையாற்றினார்.   இதன்போதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேரவையில்  உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக எந்த ஒரு விடயத்தையும் தனது ஆரம்ப உரையில் குறிப்பிடவில்லை.  முக்கியமாக எந்த ஒரு நாடு தொடர்பாகவும் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான கருத்தையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இந்த உரையின் போது தெரிவிக்க வில்லை.

மாறாக உலகளாவிய ரீதியில் பொதுவான விடயங்கள் தொடர்பாக பல்வேறு விடயங்களை  மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.    தற்போது உலக அளவில் ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் அச்சுறுத்தலானது அநீதிகள் மிக அதிகளவான சமத்துவமின்மை புறக்கணிப்புகள் போன்றவற்றை உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலானது எந்தளவு தூரம் மனித உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் நேற்றைய உரையின் போது குறிப்பிட்டார். 

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அணுகுமுறைகள் எந்தளவு தூரம் ஆழமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் மிச்செல் பல்வேறு விடயங்களை தனது உரையில் எடுத்துக்காட்டியதுடன் இந்த வைரஸ் தொற்று காரணமாக   ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் மீள் திருத்த வேண்டி ஏற்பட்டுள்ளதுடன் அவை தொடர்பாக செயற்பட வேண்டி இருக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார். 

படைகளை பயன்படுத்துவதன் ஊடாக  இந்த தொற்றுநோய்க்கு முடிவை கொண்டு வர முடியாது  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  விமர்சகர்களை சிறைகளுக்கு அனுப்புவதன் ஊடாக தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாது.  மக்கள் மீதான செல்லுபடியற்ற சுதந்திர கட்டுப்பாடுகள் தேவையற்ற  மற்றும் மேலதிக  வகையில் படைகளை பயன்படுத்துதல் போன்றன இந்த வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக அமையாது.  மாறாக தீர்மானம் எடுத்தலில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமாக கொள்கை உருவாக்கத்திலும் இடம்பெற வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19