மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LankaQR ஊக்குவிப்பு நிகழ்ச்சியின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் வங்கி காலி, அம்பலங்கொட மற்றும் எல்பிடிய ஆகிய இடங்களில் ஊக்குவிப்பு நிகழ்ச்சியினை நடத்தியது. 

LankaQR  கொடுப்பனவு முறைமை தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் நோக்கத்துடனேயே இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. 

மத்திய வங்கியினால் LankaQR  கொடுப்பனவு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு தங்கள் மொபைல் தொலைபேசியின் மூலம் கொடுப்பனவுகளை செய்துகொள்ள இடமளிப்பதன் மூலம் இலகுவாகவும் குறைந்த விலையிலும் பணமற்ற பரிவர்த்தணைகளை மேற்கொள்ளச் செய்வதாகும். 

இந்நிகழ்ச்சியில் மக்கள் வங்கியின் காலி பிராந்திய முகாமையாளர் எம்.எம்.ஏ. ரிஸ்மி மற்றும் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.