உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 

நேற்று மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போது உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை அறிக்கையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை முடிவு செய்த நிலையில், குறித்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.