ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இம்முறை கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை அவதானிக்கும் வகையிலான ஒரு பிரேரணையை பிரித்தானியா சமர்ப்பிக்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் நேற்று ஜெனிவாவில் பேரவையில்  அறிவித்தார்,

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்றையதினம் பிரிட்டன் சார்பில் உரையாற்றிய அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராப்   இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  46 வது கூட்டத்தொடர் நேற்று காலை  ஜெனிவாவில் ஆரம்பமானது.  முதலாவதாக .நா. செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமை ஆணையாளர் உரையாற்றிய பின்னர்  நாடுகளின் பிரதமர்கள்,  அமைச்சர்கள் உரையாற்றினர்.

 அதனடிப்படையில் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் ராப் நேற்று மாலை ஆரம்பம் அமர்வில் உரையாற்றினார்.  அதன்போது ரஷ்யா சீனா மற்றும் மியன்மார் நாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்    ராப்  இறுதியாக இலங்கை தொடர்பாகவும் பிரஸ்தாபித்தார்,.

அந்தவகையில் இலங்கை தொடர்பில் உரையாற்றிய பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ராப்  இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அவதானிக்கும் வகையில் ஒரு புதிய பிரேரணையை இம்முறை கூட்டத்தொடரில் பிரித்தானியா தாக்கல் செய்யும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

 ஏற்கனவே பிரிட்டன் ஜெர்மனி கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இலங்கை தொடர்பான பிரேரணையை தயாரித்துள்ள நிலையில் அதனை சில தினங்களில் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் தற்போது உத்தியோகபூர்வமாக ஜெனிவா பேரவையில்  அறிவித்துள்ளமை  இங்கு சுட்டிக்காட்டத்தக்கது