நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகிவரும் 'எண்ணித் துணிக' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'ஜிந்தா', பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'ஜானி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ். கே. வெற்றிசெல்வன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைபடம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடிக்கிறார். இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, அஞ்சலி நாயர், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.

கதிர் என்ற கதாபாத்திரத்தில் ஐடி நிறுவனத்தில் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவராக நடிகர் ஜெய் நடிக்கிறார். 'கேப்மாரி' படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய்யும், நடிகை அதுல்யா ரவியும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படம். குற்ற சம்பவத்தை புலனாய்வு செய்யும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் 'எண்ணித்துணிக' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருப்பதாலும், ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் ஜெயின் தோற்றம் அனைவரையும் கவர்ந்திருப்பதாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.