கொவிட் 19 வைரசில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக நாட்டின் மொத்த சனத்தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

அதற்கமைய, பதில் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கீழ்க்காணும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • COVAX வசதியளிப்பின் கீழ் கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதைத் துரிதப்படுத்துவதற்காக COVAX பொறிமுறை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரநியம இழப்பீடு ஒப்பந்தத்தில் (Standardized Indemnification Agreement) கையொப்பமிடுவதற்கும்.
  • இந்தியாவின் The Serum Institute Life Sciences Private Limited இற்கு நேரடி விலைமனுக் கோரலின் அடிப்படையில் Oxford AstraZeneca தடுப்பூசி 10 மில்லியன்களை இலங்கை அரச மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் மூலம் கொள்வனவு செய்வதற்கும்.
  • பிரித்தானியாவின் AstraZeneca நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பூசிகள் 3.5 மில்லியன்களை கொள்வனவு செய்வதற்கும் அரச மருந்துகள் கூட்டுத்தாபனமும் குறித்த நிறுவனமும் ஒப்பந்தமொன்று எட்டுவதற்கும்.