இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்காது பௌத்த தேசிய அமைப்புக்களை தடை செய்ய அரசு முயற்சி - சிங்கள ராவய 

Published By: Digital Desk 2

23 Feb, 2021 | 12:37 PM
image

( இராஜதுரை ஹஷான் )

அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதை விடுத்து அடிப்படைவாதத்துக்கு எதிர்ப்பு  தெரிவித்த தேசிய பௌத்த அமைப்புக்களை தடை செய்ய முயற்சிக்கிறது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுஹத தேரர் தெரிவித்தார்.

சிங்கள ராவய அமைப்பின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்iகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் தலைதோங்குவதற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். அடிப்படைவாதம் குறித்து பல உண்மை காரணிகளை பகிரங்கப்படுத்திய போது  சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் நாங்கள் இனவாதிகளாக சித்தரிக்கப்பட்டோம்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றதொன்று கிடையாது என்று குறிப்பிட்டார்கள். ஆனால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் எந்தளவிற்கு பலம் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை தன்மையினை வெளிப்படுத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் அதற்கு துணையாக செயற்படும் அமைப்புக்களையும் அரசாங்கம் தடை செய்யும் என 69 இலட்ச மக்கள் கருதினார்கள்.

இதன்காரணமாகவே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.

தற்போதைய அரசாங்கத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதை விடுத்து அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த பௌத்த தேசிய அமைப்புக்களை தடை செய்யவும், பௌத்த தலைவர்களை  கைது செய்யவும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தேசிய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்று இறுதி அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு பிரதான ஊடகத்தில் மாத்திரம்  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை எவ்வாறு வெளியானது என்பது குறித்து ஜனாதிபதி செயலாளரிடம் வினவியுள்ளோம்.

அரசாங்கம் பௌத்த கோட்பாடுகளுக்கு அமைய  செயற்படும் என்று 69 இலட்ச மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே அரச தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக பௌத்த தேசிய அமைப்புக்களை தடை செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பௌத்த தேசிய அமைப்புக்ளை தடை செய்ய ஒருபோதும் இடமளிக்க முடியாது. பௌத்த மக்களை ஒன்றுத்திரட்டி போராடுவோம். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59