கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலிய தூதுவர் கொலை

Published By: Vishnu

23 Feb, 2021 | 10:00 AM
image

கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலியின் தூதரும், இத்தாலிய பொலிஸ் அதிகாரியொருவரும், அவர்களது சாரதியைும் கொங்கோவின் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.

தூதர் லூகா அட்டனசியோ திங்களன்று கோமா நகரில் இருந்து ருத்ஷூருவில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் (WFP) கீழ் பாடசாலை உணவுத் திட்டத்தைப் பார்வையிடப் பயணித்தபோது இந்த தாக்குதல் (துப்பாக்கி பிரயோகம்) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதனால் தூதுக்குழுவுடன் பயணித்த பல பயணிகள் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொங்கோ நேரப்படி காலை 10:15 மணியளவில் (08:15 GMT) நடந்த இந்த தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை.

இத்தாலிய வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ, இந்த தாக்குதல் தொடர்பாக தனது “மிகுந்த வருத்தத்தையும் மிகுந்த துக்கத்தையும்” வெளிப்படுத்தியதோடு, பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் தனது சந்திப்பை விட்டுவிட்டு ரோம் நகருக்கு விரைவாக திரும்பினார்.

ருவாண்டா மற்றும் உகாண்டாவுடன் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் அமைந்துள்ள விருங்காவிலும் அதைச் சுற்றியும் பல ஆயுதக் குழுக்கள் செயல்படுகின்றன. 

கடந்த வாரம் வடக்கு மற்றும் தெற்கு கிவு மற்றும் இட்டூரி மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் 2,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொங்கோ ஜனநாயக குடியரசில் பணியாற்றும் போது கொல்லப்பட்ட இரண்டாவது ஐரோப்பிய தூதர் அட்டனசியோ ஆவார்.

1993 ஜனவரி இல், கின்ஷாசாவில் நடந்த கலவரத்தின்போது பிரெஞ்சு தூதர் பிலிப் பெர்னார்ட் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10