அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றினால் தொடர்ந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களுக்கு மேல் கொரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவில் 4.05 இலட்சம் பேர் உயிரிழந்தனர். வியட்நாம் போரில் 58 ஆயிரம் பேரும், கொரியப் போரில் 36 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். இதைவிட கொரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் வைரஸ் தொற்றினால்  28,174,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5,00,071 பேர் உயிரிழந்துள்ளார்கள் என ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளது.

உலகாளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 111,709,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,473,742 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.