மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரருக்கு காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மக்களால் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. 


இதில் தமிழ் முஸ்லிம் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சங்கைக்குரிய சோபித தேரர் ஞாபகார்த் உரை சிங்களத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிரதேசமெங்கும் துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவரது ஞாபகார்த்தமாக பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.