10 மில்லியன் கொவிட் 19 தடுப்பூசிகளை  இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்கின்றது இலங்கை

Published By: Digital Desk 4

23 Feb, 2021 | 07:08 AM
image

(ஆர்.யசி)

இலங்கையில் ஐந்து மில்லியன் மக்களுக்கு கொவிட் -19 வைரஸ் ஏற்றுவதற்காக இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து பத்து மில்லியன்  ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான 1029 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது. 

முதல் கட்டத்தில் இந்தியா வழங்கிய மூன்று இலட்சம் தடுப்பூசிகளையும் பயன்படுத்தி முடித்துள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவிடம் இருந்தும், உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்தும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ள நிலையில் இந்தியாவின் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமான சீரம் நிறுவனத்திடம் இருந்து பத்து மில்லியன் ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிதுள்ளதுடன், இது குறித்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த பத்து மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய 52.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் இது இலங்கை பெறுமதியில் 1029 கோடி ரூபாய்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவிக்கையில்,

இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பத்து மில்லியன் தடுப்பூசிகளை இலங்கையில் ஐந்து மில்லியன் பேருக்கு ஏற்ற முடியும் , ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் என்ற திட்டத்திற்கு அமையவே இவற்றை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம்.

இந்த தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு கொண்டுவரப்படும். அதற்கமைய மார்ச் முதலாம் வாரத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஏற்கனவே மூன்று இலட்சம் பேருக்கு ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை ஏற்றியுள்ளோம். அதில் இப்போதுவரை மோசமான பெறுபேறுகள் எதுவும் வெளியாகவில்லை.

எனவே ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் எமது மக்களுக்கு ஏற்றதாக உள்ளது. வேறு சில தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளது குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை,

மேலும் நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் -19 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பணித்துள்ளார்.

கட்டம் கட்டமாக இலங்கைக்கு கொண்டுவரும் தடுப்பூசிகளை எமது மக்களுக்கு பயன்படுத்த முடியும். உலக சுகாதார ஸ்தாபனமும் எமக்கு உதவிகளை செய்கின்ற காரணத்தினால் எம்மால் வெற்றிகரமாக எமது இலக்கை அடைய முடியும் எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

14 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்...

2025-03-26 17:29:02
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

வாழைச்சேனையில் 9 கிராம் 30 மில்லிகிராம்...

2025-03-26 17:25:24
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 17:10:10
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53