நாயால் வந்த வினை ; இரு குடும்பங்களுக்கிடையில் மோதல் : இருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

23 Feb, 2021 | 07:05 AM
image

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அயல் வீட்டுக்கு சொந்தமான நாய் தன்னுடைய வீட்டு வாசல்பகுதியில் மலம் கழிப்பது தொடர்பாக இரு வீட்டுக்கிடையே ஏற்பட்ட  வாய்த்தர்கத்தையடுத்து நாயின் உரிமையாளருக்கும்  அயல் வீட்டு உரிமையாளருக்கும் இடையே  ஏற்பட்ட சண்டையையடுத்து 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நன்றியுள்ள நாய்; உயிரை கொடுத்து 30 பேரின் உயிரை காப்பாற்றிய சோக சம்பவம்! -  TopTamilNews

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

ஆலையடிவேம்பு பஸ்தியான் வீதியிலுள்ள குறித்த வீடு ஒன்றில் நாயை வளர்த்து வருகின்றனர்.

இந்த நாய்  அயல்வீட்டின் முன்பக்க வாசல் பகுதியில் மலம் கழித்துள்ளது. இது தொடர்பாக நாய் உரிமையாளரிடம் அயல் வீட்டுக்காரர் தெரிவித்து வந்ததையடுத்து இரு வீட்டின் உரிமையாளர்களுக்கிடையே  நீண்டகாலமாக சர்ச்சை இடம்பெற்று வந்துள்ளது. 

இந்த நிலையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் குறித்த நாய் வழமைபோல அயல்வீட்டின் முன்பகுதியில் மலம் கழித்துள்ளதையடுத்து அயல் வீட்டின் உரிமையாளர் கழித்த மலத்தை பையில் அள்ளி எடுத்து நாயின்  உரிமையாளரின் வீட்டின்முன் பகுதியில் வீசியதையடுத்து நாயின் உரிமையாளாரின் குடும்பத்தினருக்கும்  அயல் வீட்டின் குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையில் முடிந்தது.

இந்த சண்டையில் நாயின் உரிமையாளரின் குடும்பத்தினர் அயல் வீட்டின் உரிமையாளர் மீது தாக்கியதில் அவர் படுகாயமடைந்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்த குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:37:52
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20