இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சமிந்த வாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கிந்தியா செல்லவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் இலங்கை அணி மேற்கிந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், 2 மணி நேரத்திற்கு முன்னதாக சமிந்தவாஸ் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து இராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், இலங்கை கிரிக்கெட்டின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட்டில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு அணி பயணிப்பதற்கு முன்னர் சமிந்த வாஸ் பொறுப்பற்ற முறையில் ஊதிய உயர்வு கேட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து சமிந்த வாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் எஸ்.எல்.சி.க்கு ஒரு தாழ்மையான கோரிக்கையை விடுத்தேன், அவர்கள் அதை நிராகரித்தனர். இந்த நேரத்தில் நான் சொல்லக்கூடியது அவ்வளவுதான். நீதி மேலோங்கும்! ” என ட்வீட் செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM