ஏ.என்.ஐக்காக திலக் தேவாஷர்

‘தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தானுக்கு (டி.டி.பி)’ பின்னால் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் மொயீத் யூசுப் 2020 அக்டோபர் மாதம் இந்திய இணைய தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது குறிப்பிட்டார். ‘தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பில் பிளவு பட்ட நான்கு அமைப்புக்களை இணைக்கவும் இந்தியா முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். 

ஆகஸ்ட் 2019 இல், பிளவு பட்டுள்ள அமைப்புக்களிடையிலான இணைப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி இந்தியத் தூதரகத்தின் ஊடாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

இதேபோன்று, 2020 நவம்பரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் இந்திய தலையீடுகள் இருப்பதாகவும் அதுபற்றிய ஆவணமொன்றை பாகிஸ்தான் தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர், பாக்கிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணமாக இருக்கும் அனைத்து பயங்கரவாதிகளுடனும் இந்தியாவின் தீவிரமான ஈடுபாட்டினைக் கொண்டுள்ளதால் ஏற்பட்ட நேரடி விளைவுகள் என்றும், தடைசெய்யப்பட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க இந்திய புலனாய்வு அமைப்புகள் முயற்சித்து வருகின்றன என்றும் கருதியிருந்தார். அவ்வாறான தனது நிலைப்பாட்டை எடுப்பதற்கு பாகிஸ்தானில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை அவர் ஆதராமாக காட்டியும் இருந்தார்.

இதேவேளை, 2020 ஆகஸ்டில் வெளியிடப்பட்ட பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிக்கையில் ‘தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான்’ (டி.டி.பி)  தன்னிலிருந்து பிரிந்த அமைப்புக்களான ஜமாத்-உல்-அஹ்ரர்-ஜுவா மற்றும் ஹர்கத்-உல்-அஹ்ரார்-{ஹவா ஆகியன மீண்டும் ஒன்றிணைந்த பின்னர், இந்தியா அதிருப்தியாளர்களுடன் ‘தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான்’ கூட்டணி அமைப்பதற்கு முயற்சிக்கின்றது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2018 இல் அமைக்கப்பட்ட பலூச் ராஜி அஜோய் சங்கர் (டீசுயுளு) பதாகையின் கீழ் ஏற்கனவே பலூசிஸ்தானின் பி.எல்.ஏ, பி.எல்.எப், பி.ஆர். ஏ (டீடுயுஇ டீடுகு இடீசுயு) ஆகிய அமைப்புக்கள் ஒன்றுபட்டுள்ளன. என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில், இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’(சுயுறு) ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தைப் பயன்படுத்தி ‘தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான்’ தளபதிகளுடன் பல சந்திப்புகளை நடத்தியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. ‘தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான்’  தலைவர்கள் ஆயுதங்களை சேகரித்த பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து  பாகிஸ்தான் எல்லைகள் ஊடாக பிரவேசித்து தமது பாதுகாப்பு இடங்களை அடைந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. \

பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் குறித்த அறிக்கையானது ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதுவர் முனீர் அக்ரமிடம் கையளிக்கப்பட்டு பின்னர் அவர் அதனை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் கையளித்திருந்தார். அதன் பின்னர் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதுவர் முனீர் அக்ரம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது,  தமது அரசாங்கம் தயாரித்த அறிக்கையில் உள்ளவாறு  பாக்கிஸ்தானில் நடைபெறும் தாக்குதல்களில் இந்தியாவின் ‘கை’ இருப்பது எங்களுக்குத் தெரியும். பயங்கரவாத தாக்குதல்கள், பிரிவினைளை ஊக்குவித்தல் மற்றும் அடிபணியச் செய்தல் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு என்னவென்றால், ஐ.நா.வின் ஒவ்வொரு அமர்வுகளில் நடைபெறும் விவாதங்களிலும் வெளியிடப்படும் ஆவணங்களிலும் பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு இந்தியா நிதி உதவி செய்தது என்று கூறி கரிபூசுவதாகும். 

இருப்பினும், 2021 பெப்ரவரி திகதியிட்ட ஐ.நா.வின் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் இருபத்தேழாவது அறிக்கையில் பாகிஸ்தான் எதிர்பார்த்தபடியான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை. மாறாக அந்த அறிக்கை வெளியான இறுதி தருணத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் வகையிலேயே விடயமொன்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதாவது, கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் காணப்படும் பந்தி 68 இல் அறிக்கை 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தானின்’ (டி.டி.பி) ஆப்கானிஸ்தானில் நடந்த பிளவு குழுக்களை மீண்டும் ஒன்றிணைப்பதை அல்-கைதாவால் மேற்பார்வை செய்யப்பட்டது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி 'அல்-கைதாவுக்கும் தலிபானுக்கும் இடையிலான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதற்கான உறுதியான ஆதாரங்களையும் உறுப்பு நாடுகள் வெளிப்படுத்தியிருந்தன. ஆப்கானிஸ்தானில்; தலிபானுடனான நெருங்கிய உறவு நிலைமைகளே தமது இராணுவ நடவடிக்கைகளின் வெற்றியும் சார்ந்துள்ளது என்று அல்-கைதா மதிப்பிடுகிறது. நன்கு அறியப்பட்டதன் படி 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தானின்’ (டி.டி.பி) நீண்ட காலத்திற்கு முன்னபாகவே ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதிப்பாடுகளை வழங்கியுள்ளது. எனவே, 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தானை’ (டி.டி.பி) நிருவகிப்பதில் அல்கைதாவின் வகிபாகம் புரிந்து கொள்ளத்தக்கது. 

இந்நிலையில் ஐ.நா.வின் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைசசு 2021 பெப்ரவரி 07 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்த அறிக்கை பாகிஸ்தானுக்கும் பிராந்தியத்திற்கும் 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’, ஜமாத்-உல்-அஹ்ரர்-ஜுவா மற்றும் ஹர்கத்-உல்-அஹ்ரார்-{ஹவா போன்ற குழுக்களால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்தும் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட இந்த அமைப்புக்களின் துணை நிறுவனங்கள் பாக்கிஸ்தானின் நீண்டகால நிலைப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளதாக இருக்கின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்து.

அதேநேரம், பாக்கிஸ்தான், கடந்த காலத்தில், தனது விரோத புலனாய்வு அமைப்புகளால் 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான் (டி.டி.பி) மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவினால் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. அவ்வாறு வழங்கிய ஆதரவின் விளைவாக கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஜமாத்-உல்-அஹ்ரர்-ஜுவா மற்றும் ஹர்கத்-உல்-அஹ்ரார்-{ஹவா மற்றும் லெஜின் உள்ளிட்ட பிற  பிளவுக் குழுக்களை  'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தானுடன்’ இணைத்தது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்ப்பு கூறுகளின் விரோத முகவர் நிறுவனங்களின் ஒத்துழைப்பை அம்பலப்படுத்துவதில் யு.என்.எம்.டி மேற்கொண்ட முயற்சிகளை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளமையையும் அந்த செய்திக் குறிப்பு குறிப்பிடுகின்றது.

எனினும் பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்திக்குறிப்பு உணராதது விடயம் என்னவென்றால், 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’ ஊழியர்கள், ஆயுதங்களைப் பெற்றபின், மீண்டும் பாகிஸ்தானுக்குள் நுழைந்தார்கள் என்று வெளியுறவு அமைச்சர்  நவம்பர் 2020 வெளியிட்ட கூற்றே முற்றிலும் உண்மைக்கு முரணானதாக உள்ளது.

அதாவது, அந்தக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் அல்ல பாகிஸ்தானிலேயே இருந்தன. மேலும், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் 2020 நவம்பர் 15 அன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் “தமது நாட்டில் மேற்படி குழுக்கள் தங்கியிருக்கின்றன என்பது ஆதாரமற்ற கூற்று” என்று நிராகரித்தது, 'உலகில் உள்ள அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எந்த பாகுபாடும் இல்லாமல் எதிர்த்துப் போராடும் கொள்கைக்கு நாங்கள் கட்டுப்பட்டள்ளோம். ஏனைய சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆப்கான் மண்ணைப் பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்” உடனான பாகிஸ்தானின் சிக்கலான தொடர்புகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஐ.நா.வில் அல்கொய்தா அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நாவின் தடைகள் மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக இருப்பவரும் பட்டியலிடப்பட்ட இலத்திரனியில் மற்றும் வெடிபொருட்கள் நிபுணராக நிபுணத்துவம் பெற்ற 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்” செயல்பாட்டாளருமான அமீர் அலி சௌத்ரி நியூயோர்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் மே 2010 அன்று நடத்தப்பட்ட ‘தோல்வியுற்ற தாக்குதலில்’ பயன்படுத்தப்பட்ட குண்டுடன் தற்செயலாக தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் பாக்கிஸ்தான் இராணுவத் தலைவர் பஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் பைஸ் ஹமீத் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் ஹக்கானி வலையமைப்பின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி தற்போதைய 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’ தலைவர் நூர் வாலி மெஹ்சூத்துடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’ அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சன் 2020 ஆரம்பத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் காவலில் இருந்து தப்பியுள்ளார். இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து பாக்கிஸ்தான் இராணுவம் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கவில்லை. எஹ்சானுல்லா எஹ்சன் 20 பெப்ரவரி 2021 அன்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றில்;, பாக்கிஸ்தான் இராணுவம் தன்னுடன் ஒரு புதிய உடன்படிக்கை நடத்த விரும்புவதாகவும், எல்லா வழக்குகளையும் மூடிவிடவும், மத்திய பஞ்சாப் மாநிலத்தில் குடியேறுவதற்கான நிலம் மற்றும் 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாக குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் பின்னணியில் செயற்படும் அமைப்பொன்றாக இருந்தால் அந்த அமைப்பினை தங்கவைப்பதற்கு பாக்கிஸ்தான் இவ்வளவு பெரும்தொகையை செலவிடத் தயாராக இருக்கின்றது என்ற வெளியாகும் கூற்று கற்பனைக் குற்றச்சாட்டை அம்பலமாக்குவதாக உள்ளது.

ஐ.நா.வில் வெளியிடப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கை மற்றும் பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஆகியவை தொடர்பில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஐ.நா. அறிக்கை, 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’ அமைப்பில் பிளவுபடும்குழுக்களுடன் இணைப்பதை அல்கொய்தாவின் பங்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. எந்தவொரு இந்திய ஈடுபாட்டையும் அல்லது 'விரோத முகமைகளையும்” பற்றி அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனினும் பாக்கிஸ்தான் பிரதமரின் உதவியாளர் மொயீத் யூசுப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் நிரூபிப்பதற்கும் அப்பிரசாரங்க்ளைத் தடுப்பதற்கும் இந்த அறிக்கைகளே போதுமானதாகவும் இருக்கின்றன. கடந்த ஆண்டு இந்தியா பயங்கரவாதத்திற்கு அத்துடன் பாக்கிஸ்தான் அரசு பெருமளவு ஆரவாரத்துடன் ஐ.நாவில் ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடடப்பட்ட விடயங்களையும் இந்த அறிக்கைகளே பொய்யானவை என்றும் மறுதலிப்பதற்கு போதுமானதாக இருக்கின்றன. 

அடுத்ததாக ஐ.நா. கண்காணிப்புக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பிக்கப்பட்டுள்ள 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’ அமைப்பினை நிர்வகிப்பதில் அல் கொய்தாவின் பங்கை பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிடவில்லை என்பது மர்மமானதாகும். அத்துடன் ஏன் அவ்வாறான விடயத்தினை தவிர்த்தது என்பதும் முக்கியமாக எழுகின்ற கேள்வியாகும். அவ்வாறான விடயமொன்றை பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தவிர்ப்பதாக இருந்தால் பிறிதான விடயங்களுக்கு அந்த அறிக்கையை ஏன் உதாரணமாக அல்லது அடியொற்றியது என்பதும் கேள்வியாகின்றது.

ஆகவே 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’ அமைப்பின் பின்னால் இந்தியாக இருக்கின்றது என்று திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட பாக்கிஸ்தானின் பொய்கள் அம்பலமாகி விடும் என்ற காரணத்திற்காகவே மேற்படி விடயத்தினை வெளிவிவகார அமைச்சு தவிர்த்திருக்கின்றது என்பதை ஊகிக்க முடிகின்றது. 

மேலும் சர்வதே சமூகத்தின் முன்னால் ஐக்கிய நாடுகள் சபையின் கண்கானிப்பு குழு அறிக்கையானது இந்தியாவுக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கும் இடையில் திரைமறைவு தொடர்புகள் இல்லை என்பதை வெளிப்படையாக கூறியுள்ளது. இது பாக்கிஸ்தானுக்கும் பதிலளிப்பதாகவே உள்ளது. அதன் பொய்யான பிரசாரங்களை உடைப்பதாகவே உள்ளது.

அதுமட்டமன்றி இந்தியா தொடர்பில் பாக்கிஸ்தான் தயாரித்த ஆவணத்திற்கும் முழுமையாக பதிலளிப்பதாக காணப்படுவதோடு 'தெஹ்ரிக்-இ தலிபான் பாக்கிஸ்தான்’ அமைப்பின் பின்னணியையும் ஒருங்கிணைவையும் அடிக்கோடிட்டு காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

(தமிழில் : ஆர்.ராம்)