தனுஷின் 'ஜகமே தந்திரம்' டீசர் வெளியீடு

Published By: Digital Desk 2

22 Feb, 2021 | 05:09 PM
image

தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கலையரசன், சௌந்தரராஜா, தீபக் பரமேஷ், தேவன், வடிவுக்கரசி, ராமச்சந்திரன், சஞ்சனா நடராஜன் ஆகியோருடன் ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் கோஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

கொரோனா பெரும் தொற்று காரணமாக பட மாளிகையில் திட்டமிட்டபடி வெளியாகாத இந்த திரைப்படம், விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் ஏப்ரலில் வெளியாகவிருக்கும் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க..’ என்ற சிங்கிள் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த பாடல்,  ஏற்கனவே வெளியான ஐயப்பன் மீதான பக்திபாடல் ஒன்றின் கொப்பி என்ற தகவல் வெளியானதால், ரசிகர்கள் தனுஷை எதிர்மறையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், அதனை தவிர்ப்பதற்காக 'ஜகமே தந்திரம்' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டம்...

2023-03-25 13:22:11
news-image

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் மனோஜ் பாரதிராஜா

2023-03-25 13:01:41
news-image

'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் இசை வெளியீடு

2023-03-25 12:48:16
news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05
news-image

குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து...

2023-03-23 16:51:38
news-image

ஜோதிகா நடிக்கும் 'காதல் - தி...

2023-03-23 12:27:21