(செ.தேன்மொழி)

வில்கமுவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல பகுதியில் நேற்றிரவு 8.20 மணியளவில் தாக்குதலுக்குள்ளான  நிலையில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபருக்கும் பிரிதொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது படுகாமடைந்த நபர் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.