கொரோனா வைரஸ் தொற்றும் சந்தர்ப்பங்களில், மூக்குக் கண்ணாடி அணியாதவர்களோடு ஒப்பிடுகையில், மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள ஆய்வுக் குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெவித்துள்ளன.
இவ் ஆய்விற்கு 304 நபர்களை ஈடுபடுத்திய நிலையில், மூக்கு கண்ணாடி அணிபவர்கள் குறைந்தளவில் தத்தமது முகத்தினை தொடுவதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்காக சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகளை தமது முகத்தை தொடுவதாகவும், அதில் சராசரியாக மூன்று தடவைகள் கண்களை தொடுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தொடர்ச்சியாக மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் தொடர்ந்தும் முகம் மற்றும் கண்களை தொடுவதை தவிர்ப்பதன் காரணமாக அவர்களிடத்தில் கொரோனா தொற்றும் சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM