கி.ஜெ.ஷண் கிளிங்ரனின் கவிதை தொகுப்பு நூலான மௌன ஊற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளரான கி.ஜெ.ஷண் கிளிங்ரனின் முதல் நூல் இதுவாகும்.  கொட்டகலை, டெரிக்கிளயாரை வசிப்பிடமாக கொண்ட ஷண் கிளிங்ரன் இந்த ஆண்டிற்கான Rotaract Club of Peace City Hatton இன் தலைவராககும் உள்ளார்.

இந்நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று  பிற்பகல் 2 மணி அளவில் ஆரம்பமாகி  4.30 மணி அளவில் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சிவாராஜேந்திரனின் தலைமையில் நிகழ்ந்தது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலைஞரும் கல்வி அமைச்சின் பணிப்பாளருமான சு. முரளிதரன் கலந்துகொண்டதுடன், நூல் அறிமுக உரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. சி. ஆர்.ஜோன் ஆற்ற, நூல் வெளியீட்டு உரையை மஸ்கெலிய புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ஜி.  குணசேகரம் வழங்கி வைத்தார்.

  

அத்துடன் நூல் ஆய்வுரையை வீரகேசரி வார வெளியீட்டின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் வழங்கியதுடன் ஏற்புரையை நூலாசிரியர் வழங்கினார்.

 

இந்நூலின் முதல் பிரதியானது அருட்தந்தை ஜி. குணம், (பங்குத்தந்தை புனித சூசையப்பர் ஆலயம், மஸ்கெலியா) அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.