இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 22 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக 1,408 பயணிகளை தமக்கான சேவைகளை பெற்றுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி 11 விமானங்கள் மூலமாக 530 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த 95 பேரும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வருகை தந்த 77 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 50 பேரும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கட்டாரிலிருந்து வருகை தந்த 46 பேரும் அடங்குவர்.

நாட்டை வந்தடைந்த அனைத்து பயணிகளும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

இதேவேளை இக் காலக் கட்டத்தில் 11 விமானங்களின் மூலமாக 878 பயணிகள் நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.

அவர்களின் இந்தியாவின் சென்னைக்கு சென்ற 180 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு சென்ற 122 பேரும் அடங்குவர்.

இந்த காலகட்டத்தில், 112,000 கிலோகிராம் எடையுள்ள சரக்குகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன், 288,000 கிலோகிராம் எடையுள்ள சரக்கள் விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் கூறினர்.