மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள  செட்டிப்பாளையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று திங்கட்கிழமை  மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

செட்டிப்பாளையம் விளையாட்டு மைதான வீதியைச்  சேர்ந்த 26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலமமே  ஆன நிலையில்  சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான  மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.