(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)

இராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட  கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்த மண்டபம் கடலோர காவல்படை பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மண்டபம் மற்றும் வேதாளைப்பகுதிகளில் அரியவகை கடல் அட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக  கடலோர கவல்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் கடலோர கவல்படை பொலிஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது    மண்டபம் கடற்கரை வீதியில் வாகன சோதனையில் சந்தேகத்திற்க்கு இடமான ஆட்டோ ஒன்று பிடிப்பட்டது அந்த ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட  தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட மண்டபம் பகுதியை  சேர்ந்த அப்பாஸ் என்ற நபரை கைது செய்த கடலோர கவல்படை பொலிஸார் மண்டபம் கடலோர கவல்படை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் பெறுமதி சுமார் முப்பது இலட்சம் இந்திய ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.