சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை 

Published By: Ponmalar

11 Aug, 2016 | 04:55 PM
image

இலங்கை  இளையோர் மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிக்களுக்கிடையில் இங்கிலாந்தின் வோர்ம்ஸ்லேயில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி  108 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி  50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர்  அசலங்க 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இலங்கை அணி சார்பில், அஷான் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, சில்வா 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் பெர்னர்ட் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், கிரீன் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 258 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.3 பந்து ஓவர்களில் 149 ஒட்டங்களுக்கு  சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹோல்டன் 40 ஓட்டங்களையும், மலிக் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சை பொருத்தவரையில், தமித்த சில்வா 3விக்கட்டுகளையும், வனிது அசரங்க, அசலங்க மற்றும் பிரசான் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை  1-0 என முன்னிலை வகிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 00:24:41
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37
news-image

RCBயை பந்தாடி சரிமாரியாக ஓட்டங்களைக் குவித்து...

2024-04-12 00:55:47
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண்...

2024-04-11 17:40:44
news-image

அப்ரிடிக்கு மேலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்...

2024-04-11 10:37:32
news-image

கடைசிப் பந்தில் வெற்றியை சுவைத்தது குஜராத்...

2024-04-11 01:10:42
news-image

40 வயதுக்குட்பட்ட, 40 வயதுக்கு மேற்பட்ட ...

2024-04-11 00:32:22