கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 1,500 பேருக்கு இதுவரை கொவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர், விமானப்படை, காவல்துறை, குற்றப் புலனாய்வுத்துறை, குடிவரவு மற்றும் குடியகல்வு துறையினர், சுங்கப் பிரிவினர், துப்புரவாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக மாலில் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி செயல்முறை பெப்ரவரி 17 அன்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தொடங்கப்பட்டது, மீதமுள்ள ஊழியர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படாத அதிகாரிகளுக்கு எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.