6 மாதங்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவர் - தூதுவர் பாலித்த கோஹன 

21 Feb, 2021 | 10:36 AM
image

(ரொபட் அன்டனி )

இவ்வருடத்தின் இறுதி அரையாண்டில் சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன  தெரிவித்தார். 

 இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றுக்கான விமானப் பயணங்களை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கலாநிதி பாலித கோஹன சுட்டிக்காட்டினார். 

சீனாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றும் கலாநிதி பாலித கோஹன அங்கு பல்வேறு தரப்புக்களை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். 

வெளிவிவகார அமைச்சர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள்   மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் சுற்றுலாத் துறை முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் இது தொடர்பில் பீஜிங்கில் இருந்தவாறு சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன வீரகேசரிக்கு மேலும் குறிப்பிடுகையில்

 தற்போது சுற்றுலாத்துறை பாரிய பாதிப்புக்களை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில் சுற்றுலா துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியது அனைவரினதும் கடமையாகும். முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த சுற்றுலாத்துறையில் தங்கி வாழ்கின்றனர்.  எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நாம் சுற்றுலாத்துறையை செயற்படுத்தவேண்டிய தேவை காணப்படுகின்றது.  

அந்தவகையில் வருடத்தின் இறுதி ஆண்டில் சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். 

அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான  விமான பயணங்களை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 அதாவது ஆறு மாத காலத்தில் சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள்.  அதன் ஊடாக எமக்கு பாரியதொரு அந்நிய செலாவணி நாட்டுக்குள் வரும்.   அதுமட்டுமன்றி சீனாவிலிருந்து வருடமொன்றுக்கு 159 மில்லியன் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.  

அதில் ஒரு வீதத்தை இலங்கைக்கு எடுத்துக்கொண்டாலும் இலங்கையின் பொருளாதாரம் பாரிய முன்னேற்றத்தை அடைந்து விடும். 

எனவே நாம் அந்த அடைவு மட்டத்தை அடைவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.  எனவே இவ் ஆண்டின் இறுதி அரையாண்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சீன  சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55