இளைஞர்களுக்கான “புதிய, மேம்படுத்தப்பட்ட” Wild Elephant

Published By: Priyatharshan

11 Aug, 2016 | 03:06 PM
image

எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தின் புகழ் பெற்ற Wild Elephant பானம், சந்தையில் புதிய தெரிவுகளோடு மீளறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட சேர்மானத்திலும் பொதியிலும் அறிமுகமாகியுள்ள Wild Elephant பானம் “எதற்கும் தயாரானதாக” ('ready for anything') உள்ளது. இன்றைய இளைஞர்களின் மனநிலைகளுக்கு பொருத்தமான வகையில் நவீன மற்றும் அலங்காரமான சிறந்த தோற்றம் கொண்டதாய் இன்றைய காலத்துக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இரு தெரிவுகள், சிவப்பு நிற கேனில் Wild Elephant ஒரிஜினல் சுவையும் நீல நிற கேனில் Wild Elephant சீனி இல்லாத சுவையும் காணப்படுகின்றன. 

அதிகளவு விரும்பப்படும் பான வர்த்தக நாமமான Wild Elephant, அதி பிரபல்யமான அசல் சுவையில் காணப்படுவதுடன் மெருகூட்டப்பட்ட சுவையில் காணப்படும் அனுகூலத்தை பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. 

இன்றைய கால கட்டத்தில் அதிகளவு உணவு பக்குவத்தை கடைப்பிடிக்கும் இளைஞர்களின் நலன் கருதி 0% சீனி சுவையிலமைந்த பானமும் அறிமுகமாகியுள்ளது.

2016 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் இந்தப் பானத்தை விற்பனை நிலையங்கள், கடைகள், சுப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், கிளப்கள், மதுபானம் அருந்தும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். 

ஒரிஜினல் மற்றும் சீனி இல்லாத தெரிவு ஆகிய இரண்டுக்கும் ரூபா 200 எனும் விலையில் Wild Elephant பானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wild Elephant இன் மீளறிமுகம் தொடர்பில் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிரதானி (பானங்கள் பிரிவு) ஃ ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவர் தமிந்த கம்லத் கருத்துத் தெரிவிக்கையில்,

“புதிய அறிமுகம் மற்றும் சுவை ஆகியவற்றுடன் Wild Elephant தற்போது இன்றைய இளைஞர்களின் மனநிலைகள் மற்றும் உளவியல்புகள் ஆகியவற்றுடன் பெருமளவு தொடர்பில் உள்ளன. Wild Elephant ஒரிஜினல் அதன் மாறாத சுவையை கொண்டுள்ளதுடன் புதிய தோற்றத்தில் அமைந்துள்ளது. “சீனி இல்லாத” தெரிவும் சிறந்த சுவையில் அமைந்துள்ளது.

அதிகளவு நாடப்படும் பானம்ரூபவ் 0% சீனி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சிகரமான அங்கங்களுடன் அறிமுகமாகியுள்ள Wild Elephant பானம், எதிர்காலத்தில் பெருமளவானோரின் தெரிவாக அமையும்” என்றார்.

“எதற்கும் தயார்” (Ready for anything) என அழைக்கப்படும் Wild Elephant பானம், வாழ்க்கையில் சகல நிலைகளுக்கும் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள பொருத்தமானதாக அமைந்துள்ளதோடு எந்தவொரு நிலைக்கும் தம்மைத் தயார்ப்படுத்தி அந்த சந்தர்ப்பங்களை வெற்றியீட்டுவதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்