நாட்டில் இன்று சனிக்கிழமை இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோானா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோானா தொற்றுக்குள்ளான 528 பேர் இன்று  அடையாளங்காணப்பட்டனர். 

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 79,480  ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் மேலும் 890 பேர் இன்று குணமடைந்தனர்.

அதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை73,456 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5,589 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.