பேஸ்புக் நிறுவனம் மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தினூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை வாசித்தல் மற்றும் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மொரிசன்  சனிக்கிழமை காலை  செய்தியாளர் சந்திப்பில், நான் மகிழ்ச்சியடைவது என்னவென்றால், பேஸ்புக் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, அதையே நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் இந்த சிக்கலின் மூலம் செயல்பட விரும்புகிறோம், எனவே அவர்கள் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன். நிறுவனம் தற்காலிகமாக மீண்டும் எங்களுக்கு நட்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

செய்தி நிறுவனங்னளின் படி, முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அவுஸ்திரேலியாவின் உறவுகள் குறித்த சட்டத்தின் தாக்கங்கள் தங்கள் சொந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.