(வாஸ் கூஞ்ஞ)

புளித்த கள்ளு விற்பனை செய்த மூன்று நபர்களுக்கு மன்னார் நீதிபதி ஒவ்வொருவருக்கும் தலா 1000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மன்னார் மதுவரித் திணைக்களம் மன்னார் பகுதியிலுள்ள கீரி, பட்டித்தோட்டம், பேசாலை ஆகிய இடங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது கள்ளு விற்பனை நிலையங்களில் புளித்த கள்ளு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரை மன்னார் நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மன்னார் மதுவரித் திணைக்கள அதிகாரிகளட ஆஐர்படுத்தியபோது அவர்கள் மூவரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டதையடுத்து மூவருக்கும் தலா 1000 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.