(எம்.ஆர்.எம்.வசீம்)
எஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தேசிய கொவிட் செயலணி ஏற்பாடு செய்திருப்பதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 25ஆம் திகதிவியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் முற்பகல் 8.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தவாரம் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் கொழும்புக்கு வருவதால் அடுத்த வாரமும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 16ஆம் திகதிமுதல் 19ஆம் திகதிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM