சீனாவில் வுஹான் நகரிலுள்ள சந்தையில் விற்கப்பட்ட பேட்ஜர்கள் மற்றும் முயல்கள்  மூலம்  மனிதர்களுக்கு கொரோனா வைரஸ்  பரப்புவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த விலங்குகள் மற்றும் பிற விலங்குகளை சந்தைக்கு விற்பனை செய்யதவர்கள் குறித்து மேலும் விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தையில் சட்டபூர்வமாக அல்லது சட்டவிரோதமாக விற்கப்படும் உயிருடன் மற்றும் இறந்த விலங்குகளின் முழு பட்டியலை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

ஐரோப்பாவிலும் மனிதர்களுக்கும் மிங்க் விலங்களுக்கும் இடையில் SARS-CoV-2 இன் இரு வழி பரிமாற்றம் உறுதிசெய்யப்பட்ட பின்னர் சீனா தனது மிங்க் பண்ணைகள் குறித்து பரவலான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் நிபுணர் குழு கடந்த வாரம் சீனாவுக்கான நான்கு வார பயணத்தை முடித்தது.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்தமைக்கான சாத்தியமில்லை என அறிவித்தனர், அதே நேரத்தில் வுஹான் சந்தையின் பங்கு தெளிவாக இல்லை.

கொரோனா வைரஸை வெளவால்கள் சந்தைக்கு கொண்டு சென்றன என்பதையும் புலனாய்வாளர்கள் சந்தேகித்தனர், இது ஒரு இடைநிலை தொகுப்பாக இருப்பதாகக் பரிந்துரைத்துள்ளனர்.